பில்லாவைத் தொடர்ந்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்துள்ள படம் ஆரம்பம். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இந்த படத்தில் அவருடன் ஆர்யா, நயன்தாரா, டாப்சி ஆகியோரும் நடித்துள்ளனர். செப்டம்பர் மாதம் திரைக்கு வர தயாராகி வரும் இப்படத்தின் ஒரு காட்சி நேற்று இணையதளங்களில் வெளியானதால் அப்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதையடுத்து பட இயக்குனர் விஷ்ணுவர்தன் விடுத்துள்ள செய்தியில், ஆரம்பம் படத்தின் டீசர் மற்றும் ஸ்டில்ஸ் வெளியான நிலையில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனால் பில்லா படத்தை விடவும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், இந்த நேரத்தில் ஆரம்பம் படத்தில் அஜீத் நடித்த காட்சி ஒன்று இணைய தளத்தில் வெளியானது எங்களுக்கு பெருத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
ஆனால், இந்த செயலை எங்கள் யூனிட்டைச்சேர்ந்தவர்கள் யாரும் செய்திருக்க வாய்ப்பில்லை. அதனால் இது யார் மூலமாக இணையதளத்துக்கு சென்றது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் அடுத்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவும் உஷாராகியுள்ளோம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment