Wednesday, August 7, 2013

ரஜினி ஸ்டைலை ரசிப்பேன்: ஷாருக்கான்



தமிழ் கலாசாரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கான், தீபிகாபடுகோனே ஜோடியாக நடித்துள்ளனர். இதில் தீபிகா படுகோனே தமிழ் பெண்ணாக வருகிறார். மும்பையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரெயிலில் நடக்கும் சம்பவங்களே கதை.
சென்னை எக்ஸ்பிரஸ் படம் வருகிற 8–ந் தேதி ரிலீசாகிறது. அதே நாளில் விஜய்யின் ‘தலைவா’ படமும் வருகிறது. இது குறித்து ஷாருக்கான் கூறியதாவது:–
சென்னை எக்ஸ்பிரஸ் காமெடி படம். இப்படத்தில் தமிழ் கலாசாரம் கேவலப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையல்ல. அது சம்பந்தமான காமெடி சீன்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். நாணயமாக இப்படத்தை எடுத்துள்ளோம். தமிழ் கலாசாரத்தை இழிவுபடுத்தும் படமாக இருக்காது.
தீபிகா படுகோனேயும், நானும் கணவன், மனைவியாக நடித்துள்ளோம். படுக்கையறையில் என்னை எட்டி உதைத்து கீழே தள்ளுவார். இது போன்று இதற்கு முன் எந்த பெண்ணும் என்னை உதைத்தது இல்லை. படத்தில் லுங்கி டான்ஸ் உள்ளது. அதை ரஜினிக்கு அர்ப்பணிக்கிறோம்.
நான் நிறைய ரஜினி படங்கள் பார்த்துள்ளேன். அவர் சூப்பர் ஸ்டார். பல வருடங்களுக்கு முன் சென்னையில் ரஜினி படப்பிடிப்புக்கு சென்று அவர் சிகரெட்டை மேலே தூக்கி போட்டு வாயில் பிடித்து புகை பிடிக்கும் ஸ்டைலை பார்த்து ரசித்து இருக்கிறேன்.
இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.

No comments:

Post a Comment