அஜீத், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள ‘ஆரம்பம்’ படத்தில் ஆர்யா, டாப்சி போன்றோரும் நடித்துள்ளனர். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டப்பிங், ரீரிக்கார்டிங், மிக்சிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றது. அடுத்த மாதம் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் ஸ்டில்கள் கடந்த வாரம் வெளியானது. அவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டது. இந்த நிலையில் ஆரம்பம் பட காட்சிகள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜீத் முக்கிய சீன் ஒன்றில் நடித்துக் கொண்டு இருப்பதுபோல் இக்காட்சி உள்ளது. படப்பிடிப்பு நடந்தபோது யாரோ திருட்டுத்தனமாக படம் பிடித்து இன்டர்நெட்டில் வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஸ்டுடியோவில் இருந்து யாரேனும் திருடி வெளியிட்டு இருக்கலாமோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.
படக்காட்சிகள் இன்டர்நெட்டில் பரவியுள்ளதால் ‘ஆரம்பம்’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்னர். விஷமிகளை கண்டுபிடிக்க விசாரணை நடக்கிறது. ‘ஆரம்பம்’ பட சீன்கள் இன்டர்நெட்டில் வெளியானதை டைரக்டர் விஷ்ணுவர்தனும் உறுதி செய்துள்ளார்.
டுவிட்டரில் இதுகுறித்து அவர் கூறும்போது, இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. என்னுடைய படக்குழுவினர் யாரும் இந்த காட்சியை வெளியிடவில்லை. அதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். இதை கண்டுபிடிக்க விசாரணை நடக்கிறது என்றார்.
No comments:
Post a Comment