சென்னை: அஜீத் ஈகோ பிடித்தவர், பிரச்சனைக்காரர் என்று தான் நினைத்ததாக நடிகர் ரகுமான் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரகுமான் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், சிங்கம் 2 படத்தில் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரியுடன் சேர்ந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. அவர்கள் இருவருமே மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பதால் தான் தொடர்ந்து வெற்றி பெறுகின்றனர். பில்லா படத்தில் நடிக்க முதலில் தயங்கினேன்.
பில்லா ஹீரோ அஜீத் ஈகோ பிடித்தவர், பிரச்சனைக்காரர் என்று நான் முதலில் நினைத்தேன். அஜீத்துடன் பணியாற்றுவது மிகவும் கஷ்டம் என்று கேள்விப்பட்டதை நம்பினேன். ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் உறுதி அளித்த பிறகே படத்தில் நடிகக் ஒப்புக் கொண்டேன்.
ஷூட்டிங் துவங்கியதும் அஜீத்தை பற்றி நான் கேள்விப்பட்டது தவறு என்பது தெரிந்தது. அவர் ஒரு இனிமையான மனிதர். அவர் மதிய வேளையில் சாப்பிட தனது கேரவனுக்கு செல்வதற்கு பதில் எங்களுடன் வந்து உட்கார்ந்து சாப்பிடுவார் என்றார்.
No comments:
Post a Comment