சென்னை: சினிமாவில், ஆக்ஷன் என்றாலே ஆண்கள் தான் என்ற பிம்பத்தை உடைத்தவர் விஜயசாந்தி. அவருக்குப் பின் சொல்லிக் கொள்கிற மாதிரி எந்த நடிகையும் ஆக்ஷன் அவதாரம் எடுக்கவில்லை என்ற போதும், குதிரையேற்றம், வாள் சண்டை என புராண காலத்து ஆக்ஷன் படங்களில் கலக்கி வருகிறார் அனுஷ்கா.
அருந்ததி தான் அனுஷ்காவின் அழகை மட்டுமல்ல, அவரது ஆக்ஷனையும் ரசிகர்களுக்கு அடையாளம் காட்டிய முதல் படம். தற்போது ‘ருத்ரமாதேவி’ மற்றும் ‘பாகுபலி’யிலும் ஆக்ஷனில் கலக்கி வருகிறாராம் அனுஷ்கா.
தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் அனுஷ்கா நடித்து விரைவில் ரிலீசாக இருக்கும் படம் ‘இரண்டாம் உலகம்’.இதிலும் அவருக்கு ஆக்ஷன் காட்சிகள் உண்டாம். இது குறித்து அப்படத்தின் ஹீரோவான ஆர்யா, தன் ஹீரோயின் பற்றி படத்தின் ஆடியோ ரிலீசில் புகழ்ந்து தள்ளி விட்டார்.
No comments:
Post a Comment