Friday, July 12, 2013

தளபதி ரீமேக்கில் அஜீத், விஜய் நடிச்சா எப்படி இருக்கும்?


சென்னை: ரஜினி, மம்மூட்டி நடித்த தளபதி படத்தை ரீமேக் செய்தால் அதில் எந்த நடிகர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஷோபனா, பானுப்ரியா நடித்த சூப்பர் ஹிட் படம் தளபதி. அதில் ரஜினி, மம்மூட்டி நட்பு பற்றி நாங்கள் கூறி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
தமிழில் ரீமேக் படங்கள் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதனால் இயக்குனர்களும் ரீமேக் படங்களை இயக்க ஆர்வம் காட்டுகின்றனர். பாலிவுட்டில் கூறவே வேண்டாம் ரீமேக் படங்கள் வசூலில் சாதனை படைத்து வருகின்றன.
இந்நிலையில் அண்மையில் வெளியான ரஜினியின் தில்லு முல்லு படத்தின் ரீமேக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ரஜினியின் மாப்பிள்ளை படத்தை ரீமேக் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப் பார்த்தவர்கள் தனுஷை திட்டித்தீர்த்தது வேறு கதை.
இந்நிலையில் தளபதி படத்தை ரீமேக் செய்தால் அதில் ரஜினி, மம்மூட்டி கதாபாத்திரங்களில் அஜீத்-விஜய், விஜய்-சூர்யா, சூர்யா-கார்த்தி, சிம்பு-தனுஷ், அஜீத்-விக்ரம் இவர்களில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். இல்லை இவர்கள் இல்லாமல் வேறு ஏதாவது புதுமுகங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?
சும்மா சொல்லுங்க. யார் கண்டது இந்த படத்தையும் யாராவது ரீமேக் செய்வார்கள்.

No comments:

Post a Comment