கார்த்திகா மகாதேவ் இசையமைத்த ‘விலகுது திரை’ என்ற திரை தமிழிசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
இதில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று முதல் சி.டி.யை வெளியிட இசையப்பாளர் பரத்வாஜ் பெற்றுக் கொண்டார். விழாவில் பாக்யராஜ் பேசியதாவது:–
நான் அரசியலுக்கு வந்த மாதிரி இசையமைப்பாளரானதும் ஒரு விபத்துதான். ‘டார்லிங் டார்லிங்’ படத்துக்காக சங்கர் கணேஷிடம் படத்தின் சூழ்நிலையை விளக்கி பாடல் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று நானே ஒரு டியூனை ஹம்பிங் பண்ணிக் காட்டினேன்.
கணேஷ் உடனே இதையே வைச்சுரலாம். நல்லாத்தான் இருக்கு என்று சொல்ல அதையே பொருத்தமான வரிகளை போட்டு படமாக்கினோம். அந்த பாடல் தான் ஓ நெஞ்சே.
இளையராஜாவிடம் கோபித்துக் கொண்டுதான் நான் இசையமைப்பாளரானேன். கோபம் என்றால் நேரடி கோபம் இல்லை பாடல் பற்றி அவர்கள் விவாதிக்கும்போது சங்கீத ஞானம் இல்லாததால் அதில் கலந்து கொள்ள முடியாமல் தவித்தேன். இதை தவிர்க்க முறைப்படி இசை கற்றேன்.
அதன் பிறகு நான் போடும் டியூன்கள் எல்லாம் நானேதான் போடுகிறேனா என பலருக்கு சந்தேகம் வந்தது. இளையராஜாவுக்கும் என் மேல் பயங்கர கோபம் வந்தது. நீயெல்லாம் ஆர்மேனிய பெட்டியை எப்படி தொடலாம் என்று சண்டைக்கே வந்து விட்டார். நானும் சண்டை போட்டேன். பிறகு என் மீது அவருக்கு கோபம் குறைந்தது
அமெரிக்காவில் இருந்து வந்த கார்த்திகா இசையமைப்பாளராக இருந்து தமிழில் இப்படி ஒரு ஆல்பம் வெளியிட்டது பாராட்டுக்குரியது.
இவ்வாறு பேசினார்.
டைரக்டர் பேரரசு, யூ.டி.வி. தனஞ்செயன், இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், பாடல் ஆசிரியர் முருகன் மந்திரம் ஆகியோரும் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment