நயன்தாராவும், பிரபு தேவாவும் காதலித்து திருமணம் வரை வந்த பிறகு பிரிந்து விட்டனர்.
முறிவுக்கான காரணம் பற்றி இதுவரை இருவரும் பேசவில்லை. முதல் தடவையாக பிரபுதேவா தற்போது பிரிவு பற்றி கருத்து தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ஐதராபாத்தில் பிரபுதேவா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:–
கேள்வி:– மனைவி ரம்லத்தை விவகாரத்து செய்து விட்டீர்கள். இப்போது அவருடனான உறவு எப்படி இருக்கிறது?
பதில்:– அதுபற்றி பேச விரும்பவில்லை. எனது குழந்தைகளுடன் நான் தொடர்பில் இருக்கிறேன்.
கேள்வி:– மகன் இறந்ததால்தான் ரம்லத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதா?
பதில்:– என் மகன் மரணம் அடைந்தது கோரமான இழப்பு. வேறு விஷயங்கள் பற்றி சொல்ல விருப்பம் இல்லை. மற்ற இரு மகன்களையும் அடிக்கடி சந்திக்கிறேன். சூட்டிங் இல்லாதபோது மும்பைக்கு அழைத்து வந்து என்னுடன் வைத்துக் கொள்கிறேன். வெளிநாடுகளுக்கும் அழைத்து போனேன்.
கேள்வி:– நயன்தாராவும் நீங்களும் காதலித்தீர்கள்– முதலில் காதலை சொன்னது யார்?
பதில்:– அதுபற்றி இப்போது பேசுவது தேவை இல்லாத விஷயம்.
கேள்வி:– நயன்தாராவுடனான காதல் முறிந்ததற்கு என்ன காரணம்?
பதில்:– அது கடவுள் எடுத்த முடிவு. நாம் நினைத்த காரியம் நடந்து விட்டதால் சந்தோஷப்படுவோம். இஷ்டப்பட்ட காரியம் நடக்காமல் போனால் கடவுள் முடிவு என்று அவரிடம் விட்டு விடுவோம். இது கடவுள் எடுத்த முடிவு. காரணம் கடவுளை நான் நம்புகிறேன். நடந்தவை எல்லாம் சரிதான். அதைபற்றி நினைப்பதில் அர்த்தம் இல்லை.
கேள்வி:– மீண்டும் திருமணம் செய்து கொள்வீர்களா?
பதில்:– என்னை சந்திப்பவர்களெல்லாம் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். என் மீதுள்ள அக்கறையில் கேட்பதாகவே உணர்கிறேன். இப்போது என் சிந்தனை தொழிலில்தான் உள்ளது. தினமும் மணிக்கணக்கில் வேலை பார்க்கிறேன்.
கேள்வி:– இப்போதைய மனநிலையில் காதல் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்:– காதலை மதிக்கிறேன். திருமணம் மீது மரியாதை இருக்கிறது.
இவ்வாறு பிரபுதேவா கூறினார்.
No comments:
Post a Comment