ஏ.ஆர்.முருகதாஸ் தீனா படத்தை இயக்கும் முன் எஸ்.ஜே.சூர்யாவின் அசிஸ்டெண்ட். வாலி படத்தின் போது அவர் அஜித்திடம் சொன்ன கதைதான் தீனா. தீனா படத்தின் முதல் சில நாட்களில் முருகதாஸுக்கு உதவும்வகையில் எஸ்.ஜே..சூர்யாவும் உடனிருந்தார்.
காலம் இருவரையும் தலைகீழாக புரட்டியது. முருகதாஸ் இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனர்களில் ஒருவர். எஸ்.ஜே. சூர்யாவின் இன்றைய நிலை… நாம் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்.
எஸ்.ஜே.சூர்யா இயக்கி, நடித்து வரும் இசை படத்தின் கடைசி ஷெட்யூல்ட் விரைவில் தொடங்குகிறது. கொடைக்கானலில் நாற்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். வளர்ந்து வரும் இளம் இசையமைப்பாளரின் மீது பழம்பெரும் இசையமைப்பாளர் கொள்ளும் பகைதான் படத்தின் அடிநாதம். இளையராஜாவையும், ஏ.ஆர்.ரஹ்மானையும் மனதில் வைத்து இசையை இயக்குவதாக எஸ்.ஜே.சூர்யா மீது குற்றச்சாற்று ஒன்றும் உள்ளது.
நிற்க. முருகதாஸ் விஷயத்துக்கு வருவோம். சினிமா இசையமைப்பாளர் பற்றிய கதை என்பதால் படத்தில் சில நிஜ இயக்குனர்களை நடிக்க வைக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. விஷ்ணுவர்தன், அழகம்பெருமாள் என சிலர் ஏற்கனவே நடிக்க சம்மதித்திருக்கும் நிலையில் குருவுக்காக சிஷ்யர் முருகதாஸும் நடிக்க சம்மதித்திருக்கிறார்.
இசைக்கு எஸ்.ஜே. சூர்யாவே இசையமைக்கிறார். ஜோடியாக நடிப்பவர் சாவித்ரி என்ற புதுமுகம்.
No comments:
Post a Comment