Friday, July 12, 2013

உன் சமையல் அறையில்… பிரகாஷ் ராஜுக்கு ஜோடி சினேகா?


சால்ட் அண்ட் பெப்பர் மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரகாஷ் ராஜ் ஜோடியாக நடிக்கிறார் சினேகா. 2011-ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற ரொமான்டிக் காமெடி மலையாளப் படம் ‘சால்ட் அண்ட் பெப்பர் (Salt N Pepper).
இரண்டு தலைமுறைகளுக்கு இடையே ஏற்படும் காதல் எப்படி இருக்கும் என்பதை இந்தப் படத்தில் சொல்லி இருந்தார்கள். இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் பிரகாஷ்ராஜ்.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என ஒரே நேரத்தில் 3 மொழிகளிலும் இந்தப் படத்தை ரீமேக் செய்யப் போகிறார் பிரகாஷ்ராஜ். தமிழில் ‘உன் சமையல் அறையில்’ என்றும், தெலுங்கில் ‘உலவச்சாறு பிரியாணி’ என்றும் பெயர் சூட்டி உள்ளனர். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் சினேகா ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் ஹீரோ யார் என்பதை இதுவரை சொல்லாமல் வைத்திருந்தார் படத்தை இயக்கும் பிரகாஷ்ராஜ். இப்போது அவரே ஹீரோவாகவும் நடிக்க முடிவு செய்துள்ளாராம். தமிழ், தெலுங்கு, கன்னடம் மூன்றிலுமே பிரபல முகம் என்பது ஒரு காரணம். இன்னொன்று, பெரிய நடிகர்கள் யாரும் கிடைக்காதது!

No comments:

Post a Comment