Sunday, July 7, 2013

படப்பிடிப்பிலிருந்து ஓட்டம்: நடிகை சந்தியா, இயக்குநர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!




சென்னை: படப்பிடிப்பிலிருந்து ஓட்டம் பிடித்து தனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக நடிகை சந்தியா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் எழில் இனியன் மாயை என்ற படத்தை தயாரித்தார். ஜே.ஆர்.கண்ணன் இயக்கினார்.

 இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது, சந்தியா திடீரென காணாமல் போய்விட்டாராம். இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார். 

இதுகுறித்து எழில் இனியன் கூறுகையில், "சென்னை புரொடக்ஷன் பட நிறுவனம் சார்பில் ‘சை' என்ற படத்தை தயாரித்து கதாநாயகியின் தந்தையாகவும் நடித்தேன். பிறகு படத்தின் பெயர் ‘மாயை' என மாற்றப்பட்டது.

 படப்பிடிப்பு மற்றும் பின்னணி இசை சேர்ப்பு பணிகள் முடிந்த பிறகு கதாநாயகி தனம் நன்றாக நடிக்கவில்லை என்று இயக்குனர் கண்ணன் கூறினார். அவருக்கு பதில் சந்தியாவை ஒப்பந்தம் செய்து மீண்டும் படப்பிடிப்பை துவக்கினார்.


 ஊட்டியில் படப்படிப்பு தொடங்கியது. அங்கு வந்த சந்தியா தனக்கு கொடுத்த கவர்ச்சி உடையை அணிய மறுத்தார். இதுபோன்ற ஆடை உடுத்தி தன்னால் நடிக்க முடியாது என்று கூறி விட்டு கிளம்பி போய்விட்டார். முதலிலேயே சந்தியாவிடம் காஸ்ட்யூம் பற்றி சொல்லாமல் அழைத்து வந்தது டைரக்டர் செய்த தப்புதான். இதனால் படப்பிடிப்பு நின்று நஷ்டம் ஏற்பட்டது.


 நடிகை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்திருக்கலாம். அவர் கொஞ்சமும் யோசிக்காமல் ஓடிவிட்டார். 


இயக்குநருடன் தகராறு 

எனக்கும் டைரக்டர் கண்ணனுக்கும் தகராறு ஏற்பட்டதால் ரூ. 24 லட்சம் பெற்றுக் கொண்டு படத்தில் இருந்து விலகி விடும்படி டைரக்டர் கண்ணன் தெரிவித்தார். நான் சம்மதித்தேன். 


அட்வான்சாக ரூ. 2 லட்சம் தந்தார். மீதி பணத்தை படம் ரிலீசுக்கு முன் தருவதாக கூறினார். ஆனால் பணத்தை தராமலேயே படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இதை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல முடிவு செய்துள்ளேன்," என்றார்.

No comments:

Post a Comment