இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்
இரண்டு படங்களில் நடிக்க விஜய் சேதுபதி, சிவகார்த்திக்கேயன் ஒப்பந்தம்
செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து மூன்று படங்களை தயாரிக்கிறது.
லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடிக்கும் படம் விரைவில்
துவங்குகிறது.
இதனையடுத்து வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களை வைத்து இரண்டு படங்களை
தயாரிக்கிறது திருப்பதி பிரதர்ஸ்.
ஒரு படத்தை தேசிய விருது பெற்ற சீனு ராமசாமி இயக்குகிறார். அதில்
விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று படத்தில்
விஜய்சேதுபதியை அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி.
பூபதி பாண்டியன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தையும்
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. காமெடி ஆக்ஷன் படங்களை இயக்கும்
பூபதி பாண்டியன் தற்போது விஷால், அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நடிக்கும்
பட்டத்துயானை படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து சிவகார்த்திக்கேயனை
இயக்குவார்.
No comments:
Post a Comment