Sunday, June 23, 2013

மூடு அவுட்டில் விஜய்... பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கவில்லை!


சென்னை: கடும் மூட் அவுட்டில் இருக்கும் விஜய், இன்று நடக்கும் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்கவில்லை.

                நடிகர் விஜய்யின் 39-வது பிறந்தநாளை இன்று 22-ம் தேதி சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

 இதற்கிடையில் சமீபத்தில் விஜய் ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்படவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சில காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.

 விழா ரத்து செய்யப்பட்டதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று பரவலாக பேசப்பட்டதால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துவிட்டனர் (உள்ளுக்குள்தான்... வெளியே காட்டியிருந்தா உள்ளே போயிருப்பாங்கங்கிறது வேற விஷயம்!!).

                  ஆனால், ‘விழா ரத்தான விஷயத்தில் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் எதுவும் இல்லை.. கல்லூரி நிர்வாகம்தான் காரணம்' என்று விஜய்யே கூறியதால் அமைதியடைந்த ரசிகர்கள் ஆங்காங்கே தங்கள் ஊர்களில் நலத்திட்ட விழாக்களுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

                விஜய் வழக்கமாக தான் பிறந்த எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தனது பிறந்தநாளன்று பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசளிப்பது மற்றும் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை எந்த நிகழ்ச்சியிலும் விஜய் கலந்துகொள்ளவில்லை. 

                       இதுபற்றி விசாரித்தபோது, ஏற்கனவே திட்டமிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டது விஜய்யை மிகவும் பாதித்துள்ளதாம். எனவே இந்த பிறந்த நாளில் அவர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை என்று கூறினர். இன்று அவர் ஜில்லா படப்பிடிப்பில் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. 

l

No comments:

Post a Comment