Tuesday, June 25, 2013

விஷாலை கட்டிபிடித்து அழுத பூபதிபாண்டியன்: பட்டத்து யானை பட விழாவில் உருக்கம்

விஷால் நடிக்கும் புதிய படம் ‘பட்டத்து யானை’. இதில் நாயகியாக அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அறிமுகமாகிறார். பூபதிபாண்டியன் இயக்குகிறார். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
நடிகர் ஆர்யா பங்கேற்று பாடல் சி.டி.யை வெளியிட்டார். விழாவில் ஆர்யா பேசும் போது புரட்சித் தளபதி, அண்ணன், கேப்டன் விஷாலும் டைரக்டர் பூபதிபாண்டியனும் நல்ல காம்பினேஷன் படம் வெற்றி பெறும் என்றார். டைரக்டர் பூபதிபாண்டியன் பேசும் போது பட்டத்து யானை படத்தை நான் டைரக்டு செய்வதற்கு காரணம் விஷால்தான் அவரிடம் போய் கதை சொன்னேன். இடைவேளையில் கதையை முடித்த போது தயாரிப்பாளரிடம் போனில் பேசி இந்த கதையை படமாக்கலாம் என்றார். என் வாழ்க்கையில் விஷாலை மறக்க மாட்டேன் என்று கூறிவிட்டு மைக்முன் கண் கலங்கினார். பின்னர் விஷால் அருகில் சென்று அவரை கட்டிப்பிடித்தும் அழுதார். இது உருக்கமாக இருந்தது.
விஷால் பேசியதாவது:-
மலைக்கோட்டை படம் முடிந்த போதே நானும் பூபதிபாண்டியனும் மீண்டும் சேர்ந்து படம் பண்ண விரும்பினோம். நேரம் அமையாததால் நடக்கவில்லை. ஐந்து வருடத்துக்கு பிறகு இப்போது சேர்ந்துள்ளோம். இங்கு அவர் நிற்பதற்கு நான் காரணம் என்றார். பூபதிபாண்டியன் காமெடியாக கதை சொல்பவர். நிறைய இயக்குனர்கள் காமெடியில் ஹிட் படங்கள் கொடுப்பதற்கு பூபதி பாண்டியன் தான் வழி காட்டி. மற்றவர்களை சிரிக்க வைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்.
பூபதி பாண்டியன் இனி இடைவெளியில்லாமல் படங்கள் இயக்க வேண்டும் பட்டத்து யானை கதையை அவர் சொன்ன போது பிடித்தது. இடைவேளையில் முக்கியமாக ஒரு விஷயம் இருக்கும் நாயகனுக்கும் டைரக்டருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தால் படம் ஜெயிக்கும். இப்படத்தில் அது இருந்தது. அத்துடன் மைக்கேல் ராயப்பன் என்ற நல்ல தயாரிப்பாளரும் கிடைத்தார் நிறைய செலவு செய்து படத்தை எடுத்துள்ளார்.
அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நாயகியாக அறிமுகமாகிறார். அர்ஜுன் எனது குரு நாதர். ஐஸ்வர்யாவுக்கு ரசிகர்கள் வரவேற்பு அளிக்க வேண்டும். சந்தானம் காமெடியில் கலக்கி உள்ளார்.
இவ்வாறு விஷால் பேசினார்.


சுந்தர்ராஜன் எம்.எல்.ஏ. தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன், செராபின் சேவியர் நடிகர்கள் மயில் சாமி, ஜான் விஜய், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்டோர் பேசினர்.

No comments:

Post a Comment