Wednesday, June 26, 2013

எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துடுச்சு- அஞ்சலி மகிழ்ச்சி



ஹைதராபாத்: என்னைச் சூழ்ந்திருந்த எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டன. இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.

                     சித்தி கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறி, சில நாட்கள் தலைமறைவாக இருந்து, பரபரப்பைக் கிளப்பி பின் போலீசில் ஆஜரானார்.

தமிழ் - தெலுங்குப் படங்களில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் தன் சித்தியுடன் சமரசமும் ஆகிவிட்டார். 


           இதுவரை தன் வாழ்க்கையில் நடந்தவை குறித்து செய்தியாளர்களிடம் அஞ்சலி கூறுகையில், "இதுவரை என் வாழ்வில் நடந்தவற்றை மறக்கவே விரும்புகிறேன். என்னால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலையில்தான் வீட்டை விட்டு வெளியேறினேன்.


                            இந்த முடிவுதான் என் பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. இப்போது நான் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். இனி என் வாழ்க்கை என் கையில்தான்.


               மற்றவர்களுக்கு கீழ்படிந்து வாழ்வதும் இழிவாக நடத்தப்படுவதும் எனக்கு பிடிக்கவில்லை. நான் சர்ச்சையில் சிக்கி இருந்த போது நிறைய பேர் ஆறுதலாக இருந்தார்கள். நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் போன்றோர் நம்பிக்கையூட்டினார்கள். அவர்களின் ஆதரவுடன் இனி தொடர்ந்து நல்ல படங்களில் நடிப்பேன். சினிமாதான் இனி எல்லாமே," என்றார்.

No comments:

Post a Comment