Wednesday, June 26, 2013

இந்த 'பரோட்டா' அலும்பல் தாங்க முடியலப்பா!: சொந்த செலவில் ஆப்பு வைத்துக்கொள்வாரோ?



சென்னை: பரோட்டா சூரி செய்யும் அலப்பறையால் அவரே அவருக்கு ஆப்பு வைத்துக் கொள்வார் போல என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. 


வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாவை அசால்டாக சாப்பிட்ட காட்சி மூலம் பிரபலமானவர் பரோட்டா சூரி. அதன் பிறகு அவர் படிப்படியாக வளர்ந்து வருகிறார். விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்தார். அவரின் நடிப்பை பார்த்தவர்கள் சூரி பெரிய ஆளாக வருவார் என்று கூறினார்கள்.


 இந்நிலையில் கொஞ்சம் வளர்ந்ததும் சூரி தனது சேட்டையைக் காண்பிக்க ஆரம்பித்துள்ளாராம். அவர் பண்ணும் அலப்பறையால் அவருக்கு அவரே ஆப்பு வைத்துக் கொள்வாரோ என்று அவரது நலம் விரும்பிகள் வருத்தப்படுகிறார்களாம். 


உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இது கதிர்வேலன் காதல் படத்தில் முதல் பாதியில் சூரியும், இரண்டாவது பாதியில் சந்தானமும் வருகிறார்களாம். முதல் பாதியில் நடித்த சூரி இரண்டாம் பாதியிலும் நான் தான் நடிப்பேன் என்று அடம்பிடித்துள்ளார். இதைப் பார்த்து சந்தானத்தின் நண்பரனான உதயநிதி டென்ஷனாகிவிட்டாராம்.


அதன் பிறகு சந்தானமே வந்து சூரியை சமாதானம் செய்தாராம். முன்னதாக தில்லுமுல்லு படத்தில் சந்தானம் சூரியை நக்கலடிக்கும் காட்சிகளுக்கு முதலில் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதன் பிறகு தான் வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டுள்ளார்.



 இப்படி ஓவரா அலும்பு பண்ணினால் கோலிவுட்டில் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது தம்பி என்று சினிமா வட்டாரத்தில் கூறுகிறார்களாம்.

No comments:

Post a Comment