சென்னை: விஜய் நடித்துள்ள தலைவா படத்தின் இசை இன்று வெளியாகிறது. நாளை விஜய் பிறந்த தினம் என்பதால், இன்று இசை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவிருக்கிறார்கள். இயக்குநர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் முதன் முதலாக கைகோர்த்த படம் தலைவா. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு இன்று மாலை சென்னையில் நடக்கிறது. தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய், அமலா பால், சத்யராஜ் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். தலைவா படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விஜய் பாடும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வெளியீட்டுக்கு முன்பே பிரபலமடைந்துள்ளது. இந்தப் படத்தின் விற்பனை உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் இதனை வெளியிடுகிறது.
No comments:
Post a Comment