அஜித்தின் தலைப்பிடப்படாத படத்தின் தலைப்பு எப்போதுதான் அறிவிக்கப்படும்? இது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது திரையுலகிற்கே பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.
படத்தின் கதைக்குத் தக்கவறான தலைப்பை தேர்வு செய்யுங்கள் என்று ‘தல’ கேட்டுக் கொண்டுள்ளாராம்!
தன்னுடைய ஆளுமையை விவரிப்பதாகவோ, தன்னுடைய பிம்பத்தை ஊதிப்பெருக்கும் விதமாகவோ தலைப்பு வைக்கவேண்டாம் என்று அஜித் கேட்டுக் கொண்டுள்ளாராம் மீண்டும்!
எனவே மீண்டும் தலைப்பு வேட்டை தொடங்கியுள்ளது. காத்திருப்பு வைபவம் மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தில் அஜித், ஆர்யா, நயந்தாரா முக்கியப் பாத்திரங்களில் நடிக்க தாப்ஸீ, மற்றும் ராணா ஒரு கேம்யோ ரோல் செய்கின்றனர்.
No comments:
Post a Comment