Monday, July 22, 2013

ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறேன் -நயன்தாரா



நயன்தாராவும் ஜெயம் ரவியும் முதல் தடவையாக ஜோடியாக சேர்ந்து நடிக்கின்றனர். ரஜினி, சரத்குமார், விஜய், அஜீத், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா என பலருடன் நயன்தாரா நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் இதுவரை நடிக்கவில்லை.
தற்போது ஜெயம் ராஜா இயக்கும் படத்துக்கு ஜெயம் ரவி ஜோடியாக ஒப்பபந்தம் செய்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவின. அது உண்மைதான் என்று நயன்தாரா உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து நயன்தாரா கூறும் போது, ஜெயம் ரவியுடன் நடிக்க கேட்டு என்னிடம் கதை சொன்னார்கள். கதை மிகவும் பிடித்தது. எனது கேரக்டர் சிறப்பாக இருந்தது. இந்த படத்தில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
இந்த படம் குறித்து டைரக்டர் ராஜா கூறும் போது, இது நான் டைரக்டு செய்யும் ஏழாவது படம். ஆக்ஷன், குடும்ப சென்டிமெட்டில் புதிய கோணத்தில் இப்படத்தின் கதை இருக்கும் என்றார். செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் அனாமிகா, உதயநிதி ஜோடியாக இது கதிர்வேலன் காதலி, போன்ற படங்களில் பிசியாக நடிக்கிறார்.

No comments:

Post a Comment