திருடா திருடி படத்தில் அறிமுகமான சாயாசிங்குக்கு அந்தப் படம்தான் முதலும் கடைசியும் போல் ஆனது. திருடா திருடிக்குப் பிறகு சரியான வாய்ப்பு அமையாமல் திருப்பாச்சியில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு ஆடினார். அதன் பிறகு சாயாசிங் மாயாசிங்கானார். ஆளை காணவேயில்லை.
நடுவில், சாயாசிங் படம் இயக்கப் போவதாக செய்திகள் வந்தன. அதுவும் கிணற்றில் போட்ட கல்லான நிலையில், மீண்டும் சாயாசிங்.
முன்னாள் கனவுக்கன்னி ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் ஹன்சிகா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தப் படத்தில் சாயாசிங்குக்கும் முக்கியமான வேடம் இருக்கிறது. அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருப்பவர் ராஜசேகர். விஷாலை வைத்து சத்யம் படத்தை இயக்கியவர்.
படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. முதல் படத்தில் ஆக்சனை முயன்று அடிபட்டவர், இரண்டாவது படத்தில் காதலை பம்ரீட்சித்திருக்கிறார். ஹன்சிகா, சாயாசிங் நடிக்கும் படம் ஒரு ஜாலியான லவ் ஜர்னியா.
No comments:
Post a Comment