மணிரத்னம் இயக்கிய ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பார்த்திபன் மகள் கீர்த்தனா சினிமா இயக்குனராகிறார். இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:–
என் அப்பா பார்த்திபன் இயக்குனராகவும், அம்மா சீதா நாயகியாகவும் இருந்ததால் சிறு வயதிலேயே சூட்டிங் போய் சினிமா விஷயங்களை தெரிந்து கொண்டேன்.
5–வது வகுப்பு படிக்கும்போது மணிரத்னம் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை அவர் படத்தில் நடிக்க கேட்டார். அப்பாவும் சம்மதித்தார். இப்போது கதாநாயனாக உள்ள சித்தார்த் அப்போது மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்தார். அவர் என் வீட்டுக்கு வந்து எனக்கு நடிப்பு பயிற்சி அளித்தார். அதில் நடித்ததற்காக பாராட்டுகள் கிடைத்தன.
அதன் பிறகு எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. இசை, நடனங்கள் கற்றேன். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினேன். அடுத்து டைரக்டராக முடிவு செய்துள்ளேன். விரைவில் நல்ல கதையொன்றுடன் டைரக்டராக அறிமுகமாக உள்ளேன்.
இவ்வாறு கீர்த்தனா கூறினார்.
No comments:
Post a Comment