ஆர்.கே.செல்வமணி இயக்கும் கண்ணிவெடி படத்தில் பெங்களூரை சேர்ந்த உதாஷா கதாநாயகியாக நடிக்கிறார். உதாஷாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் டைரக்டர் லிங்குசாமி பங்கேற்று பேசியதாவது:–
கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை என நிறைய வெற்றிப்படங்களை ஆர்.கே.செல்வமணி இயக்கியுள்ளார். எல்லாம் பிரமாண்ட படங்கள். அவரை பார்க்கவே எனக்கு பிரமிப்பாக இருக்கும். பெரிய நடிகர்கள் படங்களை எடுக்க அவருக்கு வாய்ப்புகள் வந்தன. முதல் முறையாக ரூ.40 லட்சம் வரை சம்பளம் வாங்கும் இயக்குனராகவும் இருந்தார். தற்போது கண்ணி வெடி படத்தை சிறு பட்ஜெட்டில் எடுத்துள்ளார். சிறிய பட்ஜெட் படங்கள் தற்போது வெற்றி பெறுகின்றன. இந்த படமும் ஜெயிக்கும். கதாநாயகி உதாஷா அழகாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment