Thursday, July 25, 2013

மஞ்சுளாவை இழந்து வாடும் குடும்பத்துக்கு நன்றி..- டங் ஸ்லிப்பாகி சமாளித்த 'கேப்டன்'!!


சென்னை: மஞ்சுளாவின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும்போது வார்த்தை தடுமாறி நன்றி என்று கூறிவிட்டார்.
 இதனால் சுற்றியிருந்தவர்கள் சங்கடத்தில் நெளிய நேர்ந்தது. 

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதிகளுக்கு மிக வேண்டிய நெருக்கமானவர்களில் ஒருவர் விஜயகாந்த். குடும்பத்தில் ஒருவரைப் போலத்தான் பழகினார்.

இரங்கல் தெரிவிக்க வந்தார்... 
மஞ்சுளா மறைந்த செய்தி அறிந்ததுமே மனைவியுடன் விஜயகுமாரின் ஆலப்பாக்கம் வீட்டுக்கு விரைந்து வந்தார் விஜயகாந்த். விஜயகுமாரை கட்டிப்பிடித்து அழுதார். அவருக்கு ஆறுதல் கூறினார்.
 பிரேமலதா ஆறுதல் 
 உடன் வந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் விஜயகுமார் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் விஜயகாந்தை தொலைக்காட்சி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு ஏகப்பட்ட மைக்குகளை முகத்துக்கு நேரே நீட்டினர். 
பந்தா இல்லாத மஞ்சுளா 
அவர் பேசுகையில், "நடிகை மஞ்சுளா எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றினாலும் கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் பழகினார். அவர் குடும்பத்தில் ஒருவராக இருந்தோம். எப்போது அவரது வீட்டுக்கு வந்தாலும் மோர், நல்ல உணவு தந்து உபசரிப்பார். குறிப்பாக அவர் தன் மூன்று பெண் பிள்ளைகளையும் பையனுக்கு நிகராக வளர்த்தார்...
" நன்றி... .. 
இப்படி சொல்லிக் கொண்டே வந்த விஜயகாந்த், "என்ன சொல்றதுன்னே தெரியல... மஞ்சுளாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த நன்றி.. என்றவர் சட்டென சுதாரித்து "நன்றிங்கறேன்.. என் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

No comments:

Post a Comment