சந்தானம் நம்பர்-ஒன் காமெடியன் ஆனதில் இருந்தே பலரும் அவரைப்பற்றி பலவிதமாக கருத்துக்களை சொல்லி வருகிறார்கள். சிலர், கவுண்டமணியின் ஜெராக்ஸ் என்றே ஓப்பனாக சொல்கிறார்கள்.
ஆனால், இப்படி தன்னைப்பற்றி எழும் வசனங்களுக்கு ஆரம்பத்தில் பதில் கொடுத்து வந்த சந்தானம். இப்போது எதையும் சட்டை பண்ணுவதில்லை. காரணம், எதையும் காதில் வாங்கிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு நேரமின்மையே காரணம்.
இந்த நிலையில், சமீபத்தில் அவரது காமெடி இலாகாவில் இருந்து பலர் விலகி தனித்தனியாக சில படங்களில் ஒர்க் பண்ணத் தொடங்கியதால் இப்போது அவரது இலாகாவில் குறைவான நபர்களே உள்ளனர். அதில் அனுபவம் குறைவானவர்களாக இருக்கிறார்களாம். இதனால், புதிய டயலாக்குகளுக்காக பேஸ்புக், டுவிட்டர் என்று சந்தானம் உலாவுவதாக கூறப்படுகிறது.
சில இளவட்ட ரசிகர்கள், தங்கள் பேஸ்புக்கில் நண்பர்களைப்பார்த்து கலாய்ப்பதற்காக பேசும் டயலாக்குகளை தான் நடிக்கும் படங்களில் எடுத்து பேசி வருகிறாராம் சந்தானம்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு வழக்கம்போல் சந்தானத்திடமிருந்து நோ கமெண்ட்ஸ்தான். ஆனால், அவரது தரப்பு நண்பர்கள், காமெடி என்பது நடிகர்களாக உருவாக்கினாலும், அதை காட்சிப்படுத்துவது, வசனப்படுத்துவது எல்லாமே மக்களிடமிருந்து எடுப்பதுதான். அதனால் இதை காப்பி அடிக்கிறார் என்று சொல்ல முடியாது. காமெடி என்று வருகிறபோது சிரிப்பு வந்தால் போதும்.
அதனால், இதிலெல்லாம் குற்றம் குறை சொல்லிக்கொண்டிருப்பது சரியல்ல என்கிறார்கள்.
No comments:
Post a Comment