Thursday, June 13, 2013

யுவன் சங்கர் ராஜா ஆல்பத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம்!





சென்னை: முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஆல்பத்தில் நடிக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கனவு நாயகன் என்றால் அது அப்துல் கலாம்தான். அவரது கொள்கைகளை அடிப்படையாக வைத்து 'எதிர்கால இந்தியா, இளைஞர்களின் கையில்...' என்ற கருத்துடன் ஒரு ஆல்பத்தை உருவாக்குகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த ஆல்பத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால், அவரிடமே கேட்டுள்ளார் யுவன். இரு வாரங்களுக்கு முன் டெல்லி சென்று அப்துல் கலாமை நேரில் சந்தித்து இந்த ஆல்பம் குறித்து விளக்கியுள்ளார் யுவன்.விஷயத்தைக் கேட்டதும் அவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார். கலாமுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் யுவன், இதற்கு முன் எந்த ஆல்பமும் இப்படி பிரபலமடைந்ததில்லை என்று சொல்ல வைக்கும் அளவுக்கு தீவிரமாக வேலையில் இறங்கியுள்ளார்.

No comments:

Post a Comment