சென்னை: கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை செப்டம்பர் மாதத்திலேயே வெளியிட முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. விஸ்வரூபம் 2 படத்தை இந்த ஆண்டு வெளிக் கொணர்வதில் தீவிரமாக உள்ளார் கமல்ஹாஸன். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. ஆஸ்கர் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் இந்த தீபாவளிக்கு ரஜினியின் கோச்சடையான் வரும் என்று தெரிகிறது. எனவே தன் முடிவை மாற்றிக் கொண்ட கமல், மிச்சமிருக்கும் காட்சிகளை சென்னை மற்றும் புனேவில் படமாக்கிவிட்டு, செப்டம்பரிலேயே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம். ' விஸ்வரூபம் 2' வெளியீட்டுக்கு தயாரானவுடன், அதை வெளியிடும் பொறுப்பை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் கொடுத்துவிட்டு, லிங்குசாமி தயாரிக்கும் படத்தினை இயக்கப் போகிறார் கமல்.
No comments:
Post a Comment