இயக்குநர் அமீர் மீண்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார் படத்தின் தலைப்பு ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே'. இது காமெடி கலந்த அரசியல் படம் என்கின்றனர் கோலிவுட் வட்டாரங்களில். பருத்திவீரன் வெற்றிக்குப் பின்னர் தமிழ் திரை உலகில் அறியப்பட்ட இயக்குநர் அமீர். சமீபத்தில் ஓவர் பில்டப் கொடுக்கப்பட்ட ஆதிபகவன் படத்தை அவ்வளவாக ரசிகர்கள் ரசிக்கவில்லை. எனவே இயக்குநர் வேலையை கொஞ்சம் நிறுத்திவிட்டு நடிக்கப் போய்விடலாம் என்று நினைத்துவிட்டார் அமீர். இவர் ஏற்கனவே யோகி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் படத்தில் ‘கன்னித் தீவு பொண்ணா'... என்ற குத்துப் பாட்டுக்கு நடனமாடியுள்ளார். நீண்ட நாட்களாக ஆதி பகவான் படத்தை எடுத்து ரிலீஸ் செய்த அமீர் இப்போது மறுபடியும் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பேரன்பு கொண்ட பெரியோர்களே என்று படத்துக்கு பெயரிட்டுள்ளனர். காமெடி கலந்த அரசியல் படம் என்று கூறப்படுகிறது. இதனை இயக்குபவர் சந்திரன். அமீரிடம் உதவி இயக்குநராக இருந்த ஆதாம் பாலாதான் படத்தை தயாரிக்கிறார்.
No comments:
Post a Comment